அஜிஸ் பேரி: ‘தொங்கு’ சட்டமன்றத்தில் சுல்தான் மட்டுமே தலையிட முடியும்

azizதிரங்கானுவில் ‘தொங்கு’ சட்டமன்றம் ஏற்பட்டால் அதனைக் கலைப்பதற்கும்  மாநில அரசாங்கத்தை நியமிப்பதற்கும் சுல்தானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.  மாநிலச் சட்டமன்ற சபாநாயகரிடம் அந்த அதிகாரம் இல்லை என அரசமைப்பு  வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார்.

மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் முகமட் ஜுபிர் எம்போங், அவைக்கு
வெளியிலிருந்து நியமிக்கப்பட்டவர். சட்டமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதும்,  நிரந்தர ஆணைகளை அமலாக்குவதுமே அவரது கடமைகள் என அவர்  சொன்னார்.aziz1

“ஜுபிர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அல்ல. கோலா பெசுட் இடைத்  தேர்தலுக்குப் பின்னர் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் அவர் அந்தப் பணியைச்  செய்ய முடியாது என்பதற்கு அது போதுமான காரணமாகும்.”

“அரசாங்கத்தை நியமிப்பதும் அவையைக் கலைப்பதும் அரசமைப்பு விதிகள் வழி  செய்யப்படுகின்றன. நிரந்தர ஆணைகள் மூலமாக அல்ல,” என்றும் அஜிஸ்  குறிப்பிட்டார்.