நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மதம் மாற்றம் மீதான கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும் முன்னர் அரசாங்கம் தனது எம்பி-க்களுக்கு விளக்கமளிக்கும்.
“நாங்கள் முடிந்த அவரை அந்த மசோதாவை ஆராய்வோம். எல்லோருடைய கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம்,” என இன்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் கூறினார்.
“அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்படும்.”
குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் போதும் எனக் கூறும் இஸ்லாமியச் சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத் திருத்த மசோதாவை பல தரப்புக்கள் குறிப்பாக பிஎன் உறுப்புக் கட்சிகள் கடுமையாக குறை கூறியுள்ளன.