சிலாங்கூர் சட்டமன்ற அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவர் அஸ்மின் அலி (பிகேஆர்- புக்கிட் அந்தாராபங்சா), கூடுதல் நிதி கேட்டு மாநில அரசு துணை பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதைக் குறைகூறினார்.
இது மாநில அரசின் திட்டமிடும் ஆற்றல் குறித்து ஒரு தப்பான கருத்தை உருவாக்கிவிடும்.
“2013ஆம் ஆண்டுக்கான நிதி மொத்தமும் முதல் ஆறு மாதங்களிலேயே முடிந்து போயிற்றா?”, என்றவர் வினவினார்.
மாநில அரசு, ஏற்கனவே 2013-க்காக ரிம 1.67 பில்லியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தது. இப்போது ரிம761 மில்லியனுக்கு துணை பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது.
2008-இலிருந்து இப்படி துணை பட்ஜெட் கொண்டுவருதல் ஒரு வழக்கமாகி விட்டது என்று அஸ்மின் குறைபட்டுக் கொண்டார்.
நல்ல கேள்வி? இந்த கேள்வியை எதிர் கட்சி ஆதரவு மீடியாக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்.
அஸ்மின் ஒரு இனவெறியர் ,பதவி வெறியரும் கூட !எப்படி இவனை PKR கட்சியில் இணைத்தனர் ?நாசமா போனவனுங்க