சந்தேகத்துக்குரிய நபர்கள் ‘சித்திரவதை’ செய்யப்படுவது ஏன்?

1 sithamபோலீஸ் நிலையங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவதற்கும் தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்வதற்கும் போலீஸ்காரர்களுக்கு விசாரணை முறைகளில் போதுமான பயிற்சி இல்லாதது காரணமாக இருக்கலாம் என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர்.

கடந்த எட்டாண்டுகளாக வாக்குமூலங்களும் எச்சரிக்கை வாக்குமூலங்களும் நீதிமன்றங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை வழக்குரைஞர் மன்ற குற்றவியல் சட்டக் குழுத் துணை இணைத் தலைவர் வி.சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

“வாக்குமூலம் பெறப்பட்ட முறை குறித்து நிறைய புகார் செய்யப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்”, என்றாரவர்.

ஆனாலும், தகவல் பெற தொடர்ந்து அந்த முறையைத்தான் போலீசார் கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

“இது விசாரணை முறைகளை மேம்படுத்திக்கொள்ள போலீசாருக்குப் போதுமான பயிற்சி இல்லை என்பதை அல்லது இப்படிப்பட்ட விசாரணைமுறைகளை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு மேலிருந்து கீழே சென்றடையவில்லை என்பதைக் காண்பிக்கிறது”, என்றவர் சொன்னார்.