மதம் மாற்ற மசோதா மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு தவறு காரணம் என்கிறார் சுப்ரா

subraஅண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மதம் மாற்ற மசோதாவைச்  சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு தவறு காரணம் என மஇகா துணைத்  தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் பழி சுமத்தியிருக்கிறார்.

இன்று காலை நிருபர்களிடம் பேசிய சுகாதார அமைச்சருமான அவர், அந்த  மசோதாவின் மலாய் மொழி வாசகம் ஆங்கில மொழி வாசகத்திற்கு ஏற்ப இல்லை  எனச் சொன்னார்.

2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின் 107  (b) பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் ஆங்கில மொழி வாசகம்,  குழந்தைகளை மதம் மாற்றுவதற்கு “பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய”  (“parent or guardian”) ஒப்புதல் தேவை எனச் சொல்கிறது.

ஆனால் பாஹாசா வாசகம் அந்த பெற்றோர் (“parent”) என்ற சொல்லை “ibu  atau bapa” (தாய் அல்லது தந்தை) என மொழி பெயர்த்துள்ளது என சுப்ரமணியம்  சொன்னார்.

“அந்த மசோதா முற்றிலும் புதிய மசோதாவாகும். அந்தப் பகுதியை அவை  (பிஎன் உறுப்புக் கட்சிகள்) பார்க்கவில்லை. அந்த மசோதாவை அவர்கள் தாக்கல்  செய்த போது நாங்கள் குறிப்பாக அந்த பாஹாசா மலேசியா வாசகம்  எங்களுடைய நடப்பு எண்ணங்களுக்கு ஏற்ப இல்லை என்பதை உணர்ந்தோம்.”

“நாங்கள் எங்கள் கருத்துக்களை அமைச்சரவையில் தெரிவித்துள்ளோம். நாங்கள்  இப்போது அந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்க முடியும் என்பதை பரிசீலித்துக்  கொண்டிருக்கிறோம்,” என்றும் சுப்ரமணியம் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமா என
வினவப்பட்ட போது ” அது அந்தக் கட்டத்துக்குச் செல்லும் என நான்
எண்ணவில்லை,” என்றார் அவர்.