கலால் வரியை ரத்துச் செய்வதால் கார் விலை குறையும் என எண்ண முடியாது

carsஇறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான கலால் வரியைக் ரத்துச் செய்வது கார்  விலைகளைக் குறைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என அனைத்துலக  வாணிக, தொழிலியல் துணை அமைச்சர் ஹமிம் சாமுரி மக்களவையில்  கூறியிருக்கிறார்.

கலால் வரி ரத்துச் செய்யப்பட்டாலும் நடப்பு கார் விலைகளை குறைப்பதா  அல்லது அப்படியே வைத்திருப்பதா என்பதை கார் தயாரிப்பாளர்களே முடிவு  செய்வர் என்றார் அவர்.

“அத்துடன் கார் விலைகளை பெருமளவு குறைக்கவும் கூடாது,” என ஹமிம்  கேள்வி நேரத்தின் போது சொன்னார்cars1

தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டது போல கார் விலைகளை அரசாங்கம்  குறைக்குமா என பிஎன் லாபிஸ் உறுப்பினர் சுவா தீ யோங் எழுப்பிய கேள்விக்கு  அவர் பதில் அளித்தார்.

கார் விலைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று  கூறிய ஹமிம் கலால் வரியை ரத்துச் செய்ய அரசாங்கம் எண்ணவில்லை என்றார்.