சபா பிஎன் எம்பி-க்கள்: சுலு ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டது ஏன் ?

sabahஇவ்வாண்டு தொடக்கத்தில் சபாவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகள் மீது  அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன் என்று சபாவைச்  சேர்ந்த இரண்டு பிஎன் எம்பி-க்கள் வினவியுள்ளனர்.

லஹாட் டத்துவில் போலீஸ் அதிகாரிகளை ஊடுருவல்காரர்கள் தாக்கும் வரையில்  அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளம் காண அரசாங்கம் தவறி விட்டது  குறித்தும் பிஎன் கினாபாத்தாங்கான் உறுப்பினர் பாங் மொக்தார் ராடினும் பிஎன்  கலாபாக்கான் உறுப்பினர் அப்துல் காபூர் சாலேயும் கேள்வி எழுப்பினர்.sabah1

“மூன்றாம் தரப்பு ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா ?” என பாங் மொக்தார் வினவினார்.

“என் வீட்டுக்குள் யாராவது நுழைந்தால் நான் அந்த நபருடன் பேச்சு நடத்த  மாட்டேன். நான் சுடுவேன். பேச்சு நடத்த நாம் காத்திருக்க வேண்டும் ?”

என்றாலும் சுலு ஊடுருவல் ‘மூன்று மாதங்களுக்குள்’ தீர்க்கப்பட்டதற்காக மக்கள்  ‘நன்றி’ சொல்ல வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் வான் சுனாய்டி வான்  ஜபார் சொன்னார்.