‘குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் அவசியம்’

islamதாயின் ஒப்புதலுடன் மட்டுமே ஒரு குழந்தையை மதம் மாற்ற முடியும் என்பது  தான் இஸ்லாத்தின் நிலை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறுகிறார்.

“தாயார் இஸ்லாத்துக்கு மாறாமல் தந்தை மட்டும் மாறியதால் முகமது நபி ஒரு  குழந்தையை தாயாரிடம் திருப்பி அனுப்பிய நிகழ்வு ஒன்று உள்ளது,” என அவர்  சொன்னார்.

குழந்தைகளை மதம் மாற்றம் செய்வது சம்பந்தப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தைத்  திருத்தும் நடவடிக்கை மீது அதிகாரத்துவ நிலையை எடுக்கும் முன்னர் அது பற்றி  பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் தொடர்ந்து தங்களுக்குள் விவாதிக்கும்  என அவர் மேலும் கூறினார்.islam1

இஸ்லாத்துக்கு ஒரு குழந்தையை மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில்  ஒருவருடைய அல்லது பாதுகாவலருடைய ஒப்புதலை அனுமதிக்கும் 2013ம்  ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த மசோதா  மக்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது பற்றி அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.