பினாங்கு மாநிலத்தில் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதை அந்த மாநில அம்னோ சாடியுள்ளது.
பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தத் தொகுதிகளில் காலம் காலமாக
மக்களுக்குச் சேவை செய்து வருகின்றனர் என மாநில எதிரணித் தலைவர் ஜாஹாரா ஹமிட் கூறினார்.
ஆகவே அந்த நியமனங்கள் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’ என அவர்
வருணித்தார்.
“மக்களுக்குச் சேவை செய்ய அவர்கள் நியமிக்கப்படுவதாக மாநில அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அவர்கள் நியமனத்தில் அரசியல் நோக்கம் இருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம்,” என்றார் அவர்.
நேற்று லிம் 10 ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.