‘தட்டப் பயறு இராணுவம்’ (‘Red Bean Army’)என அழைக்கப்படும் அமைப்பு மீது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார்.
அமைச்சரவை அதற்குப் பதில் 13வது பொதுத் தேர்தல் மோசடி மீது தான் ஆர்சிஐ அமைக்க வேண்டும் என்றார் அவர்.
“டிஏபி நிதி உதவியுடன் ‘தட்டப் பயறு இராணுவம்’ இயங்குவதாகக் கூறப்படுவது மீது ஆர்சிஐ அமைக்கப்பட்டால் கற்பனையான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த உலகில் ஆர்சிஐ-யை அமைத்த முதல் நாடாக மலேசியா வரலாறு படைக்கும்,” என லிம் நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த ‘தட்டப் பயறு இராணுவம்’ மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என இந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை கூறப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் அறிவித்துள்ளதற்கு லிம் பதில் அளித்தார்.