பினாங்கு சட்டமன்றத்தில் “நேரத்தை மிச்சப்படுத்த” கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதை “ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணி” என்று வருணித்த எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட் (பிஎன் -தெலுக் ஆயர் தாவார்), அதுபோல் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை என்றார்.
“அதில்தான் கேள்விகள் கேட்போம். மக்களின் பிரச்னைகளுக்கு விடைகளைப் பெறுவோம்.
“அது எதிரணி உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் ஆளும் கட்சியினருக்கும் நன்மை அளிக்கும் ஒன்றாகும்”. கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீது பேசியபோது ஜஹரா இவ்வாறு கூறினார்.
அப்படி என்றால் ICU வில் வைத்து மீண்டும் உயிர் பிழைக்க செய்யுங்க ,,,கூட்டி களைத்து பார்த்தல் சரியா வரும்