பணிஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைஞர்களாக மாறி நீதிமன்றங்களில் வழக்காடலாம், “அதில் பிரச்னை ஏதுமில்லை” என்கிறார் தலைமை நீதிபதி.
தேர்தல் முறையீட்டு வழக்குகளில் பேராக் பக்காத்தான் ரக்யாட்டின் சார்பில் முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் வாதாடுவது குறித்து குறை சொல்லப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா இவ்வாறு கூறினார்.
“என்னப் பொறுத்தவரை பணி ஓய்வு பெற்றதும் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பறிக்கக் கூடாது”, என்றார்.
வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர் லியோங், பணி ஓய்வுபெற்ற நீதிபதிகள் நீதிமன்றங்களில் தோன்றுவது ஒரு சங்கடமான நிலையை உருவாக்கும் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.