சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு ’20 அந்நிய வங்கிக் கணக்குகள்’ இருப்பதாக கூறிக் கொண்டதின் மூலம் ‘மக்களவையைத் தவறாக வழி நடத்தியதற்காக’ கண்டனத் தீர்மானத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
லியாங் இன்று தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளா விட்டால் அவரை அவையின் சலுகைகள் குழுவுக்கு முன்பு நிறுத்த பிகேஆர் உறுதி பூண்டுள்ளது.
நேற்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய லியாம் தமது கூற்றுக்கு ஆதாரமாக ‘வில்கிலீக்ஸ் தகவலை’ காட்டியிருந்தார்.
அந்தத் தகவல் வில்கிலீக்ஸில் இல்லை என்றும் அது அம்னோ ஆதரவு
வலைப்பதிவில் வெளியிடப்பட்ட வெறும் குற்றச்சாட்டே என்று பிகேஆர் துணை கொறடா சிம் சூ சின் நாடாளுமன்றத்தில் நிருபர்களிடம் கூறினார்.