குழந்தைகளை இஸ்லாத்துக்குத் தன்மூப்பாக மதம் மாற்றுவதை அனுமதிப்பதில்லை என 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவில் தாம் உறுதியாக நிற்பதாக சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
பெற்றோர்கள் இருவருடைய ஒப்புதலுடன் மட்டுமே மதம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது தமது கருத்து என நஸ்ரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
“அரசமைப்பு குறிப்பாக சமயம் என வரும் போது அரவணைப்புடன் வாசிக்கப்பட வேண்டும், தனித்து நிற்கக் கூடாது,” என்றும் அவர் சொன்னார்.
நஸ்ரி மூலமாக ” மடை” திறந்துவிடபத்டுள்ளது , ம இ கா இனி துணிச்சலாக மசோதாவை எதிர்கொள்ளலாம் ! எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
கல்லுக்குள் ஈரம். நல்ல இஸ்லாமியனுக்கழகு நஸ்ரியின் அறிக்கை. எல்லாவற்றிலும் நஸ்ரி நடுநிலையுடன் நடந்துகொண்டால் நல்லதுதான். இதை , இந்த முடிவை வரவேற்போம்!
இதைதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது என்பார்கள்.இதன் மூலம் உம்னோ தன் பலத்தையும்அதிகாரத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் காட்டி மிரட்டுகிறது. நம்ப மானங்கெட்ட பாரிசன் இந்திய தலைவர்கள் வேண்டுமானால் இதை வைத்து அரசியல் பண்ணலாம்.ஆனால் இச்சட்டம் கடைசியில் நிறைவேற்ற படாது. இதுவும் இன்னொரு இண்டர்லோக் கதைதான்.
இந்த மசோதாவை முன்மொழிந்த நாதாரி யார்?