பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் கேள்வி பதில் நேரம் இல்லாதது குறித்து முதலமைச்சர் லிம் குவான் எங் வியப்படைந்துள்ளார்.
அந்த நிலைமை தவிர்க்கப்பட்டிருக்க முடியும் எனக் கூறிய அவர், மாநில சட்ட ஆலோசகருடைய அறிவுரைக்கு இணங்க அவைச் செயலாளர் அந்த முடிவைச் செய்ததாகத் தெரிவித்தார்.
“ஜுன் 28ம் தேதி லாவ் சூ கியாங் (பிகேஆர் புக்கிட் தம்பூன்) சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவைச் செயலாளர் சட்ட ஆலோசகருடைய அறிவுரைக்கு இணங்க செயல்பட்டு வந்தார்.”
‘நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக’ கேள்வி பதில் நேரம் நிறுத்தப்பட்டதால் பினாங்கு சட்டமன்றத்தில் “ஜனநாயகம் மடிந்து விட்டது” என எதிர்த்தரப்புத் தலைவர் ஸாஹாரா ஹமிட் குறை கூறியுள்ளதற்கு லிம் பதில் அளித்தார்.