சாபாவில் குடுயேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியம் அளிக்க வந்த ஒர் இந்தோனேசியர், அவர் வைத்திருப்பது போலி அடையாள அட்டை என்று கூறக்கேட்டு அதிர்ந்து போனார்.
விசாரணை நடத்துனர் ஜமில் அரிபின், இந்தோனேசியாவின் தீமோரில் பிறந்தவரான இஷாக் உஸ்லுவானிடம் இதனைத் தெரிவித்ததும் அவர் பேச்சிழந்து உறைந்து போனார்.
“உங்கள் அடையாள அட்டை போலியானது. யாரோ உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள்”, என்று ஜமில் இஷாக்கிடம் தெரிவித்தார்.
இஷாக் சாட்சியமளித்து முடிந்ததும் அவரின் ஐசி பறிமுதல் செய்யப்பட்டது. உடனே இந்தோனேசிய தூதரகத்தை அணுகி புதிய பயண ஆவணங்களுக்கு ஏற்பாடு செய்துகொள்ளும்படியும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.