போலி அடையாளக் கார்டு பறிமுதல் ஆர்சிஐ-யைக் கீழறுப்புச் செய்யும் தந்திரமா ?

Sabah ic‘இனிமேல் போலி அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் யாரும் சாட்சியமளிக்க  முன் வரமாட்டார்கள். சாட்சிகளை மிரட்டினால் ஆர்சிஐ எப்படி உண்மையை  அறியப் போகிறது?’

ஆர்சிஐ-யில் இந்தோனிசியரின் அடையாளக் கார்டு பறிமுதல்

மலேசிய இனம்: நான் தவறைச் சரி எனச் சொல்லவில்லை. சாட்சிகள் முன்வந்து  சாட்சியமளிப்பதை தடுப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலாகும்.

ஆர்சிஐ உண்மையில் நியாயமாக வேலை செய்கின்றது என்றால் அது
விசாரணைகளை முடித்த பின்னர் போலி அடையாளக் கார்டுகளைப் பறிமுதல்  செய்யலாமே.

நியாயமானவன்: இனிமேல் போலி அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும்  யாரும் சாட்சியமளிக்க முன் வரமாட்டார்கள். சாட்சிகளை மிரட்டினால் ஆர்சிஐ  எப்படி உண்மையை அறியப் போகிறது.

சிவிக்: இது உண்மையில் சாட்சியமளிக்க வேண்டாம் என விடுக்கப்படும்  மிரட்டலாகும்.

டேக்கிங்: அந்த நீல நிற அடையாளக் கார்டுகள் போலியானவை என்பதால்  அவர்களுடைய குடியுரிமையை மீட்டுக் கொள்ளும் விஷயமே எழவில்லை.

போலியான பத்திரங்களை வைத்திருந்ததற்காகவும் சட்டவிரோதமாக
நுழைந்ததற்காகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்குப் பதில் அத்தகைய  போலி அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்ற சாட்சிகளுக்கு ஒரு வேளை  மன்னிப்பு கொடுக்கப்படலாம்.

ஒஎம்ஜி: போலியான பத்திரங்களைக் கொண்டு அடையாளக் கார்டுகளைப் பெற்ற  மற்ற சாட்சிகளுடைய அடையாளக் கார்டுகளை ஏன் ஆர்சிஐ நடத்துநர் ஜமில்  அரிபின் பறிமுதல் செய்யவில்லை ?

அந்த அடையாளக் கார்டு ஊழலுக்கு கிரிமினல் கும்பல்களே காரணம். மகாதீர்  திட்டம் அல்ல என அவர் ஆர்சிஐ-க்குச் சொல்ல வருகிறாரா ?

ஒடின்: கடந்த ஆண்டும் 2011லும் அந்நியர்களுக்கு அடையாளக் கார்டுகளை  விற்றதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முறையான ஆவணங்கள் இல்லாத சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு  உடனடி குடியுரிமை கொடுக்கப்பட்டதுடன் போலி அடையாளக் கார்டு  விற்பனையும் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறதா ?

1970ல் 636,431-ஆக இருந்த சபா மக்கள் எண்ணிக்கை 2000ம் ஆண்டில்
2,449,389 பெருகியதில் வியப்பு ஒன்றுமில்லை.

சியாங் மாலாம்: 40 ரிங்கிட்டுக்கு நீல நிற அடையாளக் கார்டு.  அது என்ன அவ்வளவு  மலிவானதா, எளிதானதா ?

 

TAGS: