ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு என்ஜிஓகள்- கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும்- ஏற்பாடு செய்திருந்தன.
படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் வந்தனர். படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள், பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை அப்பட்டமாக சித்திரிக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபெல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டன.
ராஜபக்சே என்ற நா…, அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. அந்த நா… முதலில் குற்றவாளி குண்டில் எற்றவெண்டும்.
நம்மளும் உரிமைக்கு ஆயுதம் ஏந்தி விடுவோம் எனும் bayamthaan .
ஓர் இனமே அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதை உலகுக்குக் காட்ட முன் வந்த அவர்களைப் பாராட்டுகின்றேன். அங்கு நடந்த கொடுமையை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். எதுவுமே செய்ய இயலாமல் நம் இனம் அழிவதை மட்டும் பார்க்கிறோமே!!!!!!!!
ராஜபக்சே, கோதபாய ராஜபசே இருவரும் போர் குற்றவள்ளிகள், பல ஆயிரக்கண அப்பாவி தமிள்ளர்களை கொன்று குவித்தவர்கள், ஐநா கூறுகிறது.இசைபிரிய, பிரபாகரன்மகன் இவர்களை போல் எத்தனையோ தமிழர்கள் கொன்றது யார்
ராஜ பக்சாவை முதலில் போட்டு தள்ளுங்க