சாபா குடிநுழைவுத் துறை முன்னாள் துணை இயக்குனர் இஸ்மாயில் அஹ்மட், கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அரசியல்வாதிகள் தலையிடுவது உண்டு என்றார்.
சாபாவில் குடியேறிகள்மீது விசாரணை நடத்திவரும் அரச ஆணையத்திடம் இன்று சாட்சியம் அளித்த இஸ்மாயில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வார்கள் என்றார்.
“பல தடவை அப்படி நடந்திருக்கிறது.
“அந்த ஒய்பிகள் வந்து ‘இவர்கள் நம்ம ஆட்கள்’, எனவே தொந்திரவு செய்ய வேண்டாம் என்பார்கள்”, என்றாரவர்.
இதுல வாய் கிழிய பேசும் புங் மொக்தாரும் இருப்பாரோ ??? கள்ள குடியேறிகளை வைத்துக்கொண்டு வெற்றிபெற்ற துரோகிகளே , உண்மையான கடசான் மக்களை ஏமாற்றி திருட்டு தனமா வெற்றிபெற்று வந்தவனுக்கு இருக்குது ஆப்பு !!!!