பினாங்கின் பக்காத்தான் ரக்யாட் அரசு “முக்கிய விவகாரங்களை மூடிமறைக்க” விரும்புகிறது அதனால்தான் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை எடுத்துவிட்டது என்கிறார்கள் பினாங்கு பிஎன் இளஞர் தலைவர்கள்.
அவர்கள் இன்று சட்டமன்றத்தைப் “பார்வையிட”ச் சென்றிருந்தனர்.
மாநில பிஎன் இளைஞர் தகவல் தலைவர் இங் கூன் லெங், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் “முக்கியமான” விவகாரங்கள் சிலவற்றுக்கு பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், அதுதான் இப்படி என்று கூறினார்.
“கேள்வி நேரத்துக்கு இடமளிக்காததன்வழி ஜனநாயக நடைமுறைக்கே சாவுமணி அடித்து விட்டார்கள்”, என்றாரவர்.

























