கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்களுடைய உருவகப் படங்களை வெளியிடுவதில் போலீசார் இரட்டைத் தரத்தைப் பின்பற்றக் கூடாது என டிஏபி சிகாம்புட் எம்பி லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
என் தர்மேந்திரனின் தடுப்புக் காவல் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக
சந்தேகிக்கப்படும் நான்காவது போலீஸ் அதிகாரியின் படத்தை வெளியிடுமாறு தாம் பல முறை கேட்டுக் கொண்ட போதிலும் போலீசார் அதனை இன்னும் செய்யவில்லை என்றார் அவர்.
“இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் வீட்டில்
கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களுடைய உருவகப் படங்களை போலீசார் வெகு வேகமாக வெளியிட்டுள்ளனர்.”
தர்மேந்திரன் விஷயத்திலும் அவ்வாறு வேகமாக செயல்படுமாறு நான்
போலீசாரைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதப்படும் நான்காவது போலீஸ் அதிகாரி (இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ளவர்) ஒளிந்து கொண்டு விட்டார் எனப் போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த போலீஸ் அதிகாரியின் படத்தை அதிகாரிகள் இது வரை
வெளியிடவில்லை.
கைரி வீட்டில் திருடியவர்கள் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரன் விவகாரத்தில் சரியான ஓவியர் கிடைக்கவில்லை !
நீங்களே திருடர்களை கூடி வந்து திருட சொல்லுவேங்க ,,பிறகு என் வீடில் கொள்ளை போயிடுச்சி என்று அனுதாப வ்லம்பரம் தேடுவேங்க ,,போங்கடா ….களே