வாக்குகள் எண்ணப்படுவதை நேரடியாக ஒளிபரப்ப அரசாங்கம் எண்ணுகின்றது

kira undiகோலா பெசுட் இடைத்தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் வாக்குகள்  எண்ணப்படுவதை நேரடியாக வீடியோ ஒளிபரப்புச் செய்வதற்குத் தேர்தல்  ஆணையம் அனுமதிக்க வேண்டும் என கூட்டரசு அரசாங்கம் விரும்புகின்றது.

அவ்வாறு அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்தைத் தாம் வற்புறுத்தப்
போவதாகவும் அதனைச் செய்யும் ஆற்றல் ஆர்டிஎம்-முக்கு உள்ளதா என்பதை  விசாரிக்கப் போவதாகவும் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக்  கூறினார்.

“வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மாலை 5 மணிக்குத் தொடங்குகின்றது.  இருட்டடிப்பு ஏற்பட்டால் மக்கள் அதனை நேரடியாக தொலைக்காட்சியில் காண  முடியும்,” என்றார் அவர்.

மக்களவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் பற்றி  வினவப்பட்ட போது அகமட் சாப்ரி அந்த யோசனையைத் தெரிவித்தார்.