சாட்சி: குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு போலி அடையாளக் கார்டு கண்டு பிடிக்கப்படுகின்றது

Sabah icசபாவில் போலி அடையாளக் கார்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.  குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு கள்ள அடையாளக் கார்டு கண்டு  பிடிக்கப்படுவதாக சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் இஸ்மாயில் அகமட்  கூறுகிறார்.

அத்தகைய போலிகளில் மை அடையாளக் கார்டுகள் மட்டும் சம்பந்தப்படவில்லை.  பழைய நீல நிற அடையாளக் கார்டுகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர்  சொன்னார்.

இஸ்மாயில் இன்று கோத்தா கினாபாலு நீதிமன்ற வளாகத்தில் அரச விசாரணை  ஆணையத்தின் முன்பு சாட்சியமளித்தார்.

1978ம் ஆண்டு தேசியப் பதிவுத் துறையிடமிருந்து சட்ட விரோதமாக நீல  அடையாளக் கார்டுகள் பெறப்பட்ட போது சபாவின் அடையாளக் கார்டு  பிரச்னைகள் தோன்றியதை அவர் ஒப்புக் கொண்டார்.

நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்கு சபாவில் ஒருவர் பிறந்திருக்க  வேண்டும் என்பதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழுடன் சத்தியப்  பிரமாணத்தையும் தேசியப் பதிவுத் துறை அந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளத்  தொடங்கியது என்று இஸ்மாயில் தெரிவித்தார்.