மதமாற்ற சட்டமசோதா: கருத்துரைக்க எம்பிகள் தயக்கம்

pasஇஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதா 2013 மீது கருத்துத் தெரிவிக்க பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை.  மற்ற முஸ்லிம் எம்பிகள் சர்ச்சைக்குரிய அச்சட்ட முன்வடிவு குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (படத்தில் வலம் இருப்பவர்) அது பற்றி மலேசியாகினியிடம் விவரித்தார்.

“சட்டமசோதா சொல்வது சரியா, (2009) அமைச்சரவை முடிவு சரியா என்பது தெரியவில்லை. அதனால் பாஸ் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறது”, என்றாரவர்.

புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமசோதா குழந்தைகளை மதமாற்ற பெற்றோரில் ஒருவர் சம்மதித்தால் போதும் என்கிறது. அமைச்சரவையோ இருவரின் ஒப்புதல் தேவை என்று 2009-இல்  முடிவு செய்திருந்தது.