நீர் விரயத்தைத் தடுப்பதற்குக் கொடுத்த நிதியில் ஷபாஸ் கார் வாங்கியது; அலுவலகத்தைப் பழுது பார்த்தது

khalid2011-இல், சியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூருக்கு (ஷபாஸ்) அதன்  விரயமாகும் தண்ணீரை 20விழுக்காடாகக் குறைக்கும் திட்டத்துக்காக மாநில அரசு  ரிம784 மில்லியன் ஒதுக்கீடு செய்தது.

ஆனால், விரயமாகும் தண்ணீரின் அளவு குறையவில்லை.  அது இன்னும் 33 விழுக்காடாகவே உள்ளது.  அப்பணத்தில் 32 விழுக்காடு மட்டுமே அத்திட்டத்துக்காக செலவிடப்பட்டிருக்கிறது.

“மீதி,  கார்கள் வாங்குவது, அலுவலகத்தைப் பழுதுபார்ப்பது போன்ற திட்டத்துக்கு சம்பந்தமில்லாத விசயங்களுக்குச் செலவிடப்பட்டதாக தேசிய கணக்கறிக்கை கூறுகிறது”, என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.