அவசரகாலச் சட்டவிதி(இஓ)களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் வரைவை முதலில் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அதன் தொடர்பில் பின்னூட்டம் வழங்க முடியும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ.
அப்புதிய சட்டம் தொடர்பில் மாற்றரசுக் கட்சிகள், என்ஜிஓ-கள் முதலியோரின் கருத்துகளை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு கோபிந்த் இவ்வாறு மறுமொழி அளித்துள்ளார்.
“சீரமைப்பையும் நீதிமுறையை மேம்படுத்துவதையும் வரவேற்கிறோம். ஆனால், அது விசாரணையின்றி காவலில் வைக்க வகை செய்வதாக இருந்தால் அதை ஆதரிக்க மாட்டோம்”, என்றாரவர்.
நாட்டில் நல்லவர்களைக் காப்பாற்ற ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ கொலைகாரன், கொள்ளைகாரன், ரவுடி, புறம்போக்குகளைக் காப்பாற்ற நிறையபேர் இருக்கிறார்கள். அதுவும் நமது பக்கத்தான் எம்பிகளுக்கு இந்தியர்களைத் திட்டமிட்டு அழிப்பதில் அலாதி ஆசை. எவனாவது லாக்கப்பதில் செத்து விட்டால் அவர்களுக்கு ஏற்படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. தெருவில் ஆர்ப்பாட்டம் செய்து உண்டு இல்லை என செய்து விடுவார்கள். அதே சமயம் கொடூர ஆசாமிகள் அப்பாவியின் வீட்டில் புகுந்து பொருள்களைக் கொள்ளையிட்டு பெற்றோர் முன்னிலையில் பெண் பிள்ளைகளைக் கற்பழித்து விட்டு தப்பினாலோ தெருவில் பாராங் கத்தியால் அப்பாவியை வெட்டிக் கொன்றாலோ அதனை மறந்து தட்டிக் கேட்க மாட்டர்கள். ரவுடிகளுக்கான வக்காலத்து வாங்கும் இந்த அரசியல்வாதிகளை முதலில் அழிக்க வேண்டும்.