சாபா, தாவாவில் பிறந்த ஒருவர் 40 ஆண்டுகளாக ‘பெயர் இல்லை’ என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாக சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினார்.
மஹாட் இஸ்மாயில், 65, பிறந்தபோது அவரின் தந்தை மற்ற விசயங்களில் மும்முரமாக இருந்ததால் பெயரைப் பதிவு செய்யவில்லை
உடனே,“மருத்துவ மனை அதிகாரி ஒருவர் பிறப்புச் சான்றிதழில்(பெயர் எழுதும் இடத்தில்) ‘பெயர் இல்லை’ என்று பதிந்து விட்டார்”, என்றவர் கூறியதும் விசாரணை நடக்கும் அறையில் குபீரென்று சிரிப்பொலி கிளம்பியது.
1980-களில்தான் அதைத் திருத்தி மஹாட் இஸ்மாயில் என்று வைத்துக்கொண்டதாக அவர் சொன்னார்.
வாக்காளர் பட்டியலில் ‘பெயர் இல்லை’ என்ற பெயரைப் பார்த்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியது உண்டு.