கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையை ஒரு புதிய விநியோகிப்பாளரிடமிருந்து வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்துள்ளார்.
“இம்முறை மேம்பட்ட மையை வாங்குவோம்…..அது அழியாமல் இருக்க அதில் போதுமான அளவு சில்வர் நைட்ரேட் இருப்பதையும் உறுதிப்படுத்துவோம்”, என்றாரவர்.
13வது பொதுத் தேர்தலில் அழியா மை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டபோது பல வாக்காளர்கள் அது விரைவில் அழிந்து போனது கண்டு பெரிதாகக் குறை கூறினார்கள்.