குழந்தையைத் தன்மூப்பாக மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் மசோதா, மலேசியா கையெழுத்திட்டுள்ள குழந்தை உரிமைகள் மீதான ஐநா ஒப்பந்தத்திற்கு முரணானது. ஆகவே அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என கூலாய் எம்பி தியோ நீ சிங் கூறுகிறார்.
இஸ்லாத்துக்கு குழந்தைகளை தன்மூப்பாக மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சமய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) மசோதா, குழந்தை உரிமைகள் மீதான ஐநா ஒப்பந்த உணர்வுக்கு எதிரானது என அவர் சொன்னார்.
“அந்த மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்,” எனத் தியோ இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் டிஏபி கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுத் துணைச் செயலாளரும் ஆவார்.