EAIC எனப்படும் அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் 2009ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் அரச மலேசியப் போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட 31 விவகாரங்களைத் தீர்த்துள்ளது.
“அந்த எண்ணிக்கை சிறியது என சில தரப்புக்கள் எண்ணலாம். 2009ல் அந்த ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் அது 2012ல் தான் முழுமையாக செயல்படத் தொடங்கியது என்பதை அவை உணர வேண்டும்,” என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் கூறினார்.
அவர் நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சியின் ஹலோ மலேசியா நிகழ்ச்சியில் பேசினார்.
அமலாக்க நிறுவனங்களின் நேர்மை மீறப்பட்ட விவகாரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சுயேச்சை அமைப்பு EAIC என அவர் சொன்னார்.
அது எந்த வகையிலும் போலீசாரின் கடமைகளுக்கு இடையூறாக இருந்தது இல்லை என்றும் வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.