ஜஹிட்: தேச நிந்தனைச் சட்டத்துக்குத் தேவை இருக்கிறது

1 zahidஉள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுவதை எதிர்க்கிறார். அதை அகற்றிவிட்டால் தேச நிந்தனைக் கருத்துகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லாது போய்விடும் என்பது அவருடைய கருத்து.

“அதை அகற்றுவது அவதூறு கூறுவதை, அபாண்டமாக குற்றம் சாட்டுவதை ஊக்குவிப்பதாக அமையும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல”. இன்று காலை உத்துசான் மலேசியா தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் ஜஹிட் இவ்வாறு கூறினார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் குற்றச்செயல்கள் பெருகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.