அரசாங்கம் போலீஸ் படையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அவசரகாலச் சட்டம் (இஓ) போன்ற அடக்குமுறைச் சட்டங்களை (இஓ) மீண்டும் கொண்டுவருவதன் மூலமாக “குறுக்கு வழியில்” குற்றச்செயல்களைத் தடுக்கப் பார்க்கிறது என வழக்குரைஞர் அமைப்பு ஒன்று சாடியுள்ளது.
நாட்டின் குற்றச்செயல் பிரச்னைக்குத் தீர்வு “இஓ போன்ற அடக்குமுறை தடுப்புச் சட்டங்களை மறுபடியும் கொண்டு வருவதிலோ சந்தேகத்துக்குரியவர்களை நியாயமான விசாரணையின்றி நீண்டகாலத்துக்குத் தடுத்துவைக்க வகை செய்யும் அவை போன்ற மற்ற சட்டங்களிலோ” இல்லை என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆலோசகருமான எரிக் பால்சன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அரசாங்கம், கவனத்தை போலீஸ் படையைச் சீரமைப்பதிலும் தரமுயர்த்துவதிலும் செலுத்த வேண்டும் என்றாரவர்.