பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை மீட்டுக் கொள்வது மட்டும் போதாது என பினாங்கு மாநில கெரக்கான் சட்ட, மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பல்ஜித் சிங் கூறுகிறார்.
அதனை இப்போது முழுமையாக ரத்துச் செய்யாவிட்டால் அது மீண்டும் தோன்றும் என அவர் கருதுகிறார்.
அத்துடன் பிரச்னைக்கான அடிப்படை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றார் அவர்.
“அந்த விவகாரத்தை ‘ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வர’ எல்லாத்
தரப்புக்களும் கலந்தாய்வு செய்வதும் அவசியமாகும்.”
“அந்த மசோதாவை மீட்டுக் கொள்வதால் மட்டும் பிரச்னை தீரப் போவதில்லை. அது குறித்த கவலை இன்னும் போகவில்லை,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“அரசியல் களத்தில் உள்ள எல்லாத் தரப்புக்களும் அந்த மசோதாவை விவாதித்து பெற்றோர் இருவருடைய ஒப்புதல் இல்லாமல் குழந்தையை மதம் மாற்றம் செய்ய முடியாது என்பதை உறுதி செய்ய கூட்டரசு அரசமைப்பைத் திருத்த வேண்டும்,” என்றும் பல்ஜித் கேட்டுக் கொண்டார்.
கட்சி என்பது வேறு , மதம் , இனம் , மொழி என்பது வேறு ! என் மதம்தான் உயர்த்து என்று யாரும் கொடிகட்டி பறக்க நினைகக்கூடது . விடாந்திங்க சிங் !! நம்ம குனிந்த கொட்டிகிட்டே இருப்பானுங்க ! கட்சியா ? மதமா ? முடிவு நம் கையில் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மதம் மாற்ற பிரச்னை இந்த மலேசியாவில் தான் இருக்கு, நாடுக்காரன் நாட்டுக்காரன் என்று சொல்லுகிறார்களே ,எவன் நாட்டுக்காரன்?? மலேசிய மண்ணில் ஒரு தமிழன் பிறந்தால் அவன் மலாயக்காரந்தானே ! மலாக்கார்ன் என்பது இந்த மண்ணில் பிறந்த எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் அவன் மலைகாரந்தான் ,இந்த நாடில் பிறந்த சீனனும் மலைக்காரன் தான் ,முதலில் இந்த நாட்டுக்கு தமிழா வைத்த பெயரு மலை நாடு ,காலப்போக்கில் மலேசிய…
மதம் மாற்றம் பெற்றோர்கள் மற்றும் இன்றி இந்து சங்கத்தின் அனுமதியும் பெற்றால் சிறப்பாக இருக்கும். இந்து சங்கத்தின் அனுமதி இன்றி நம் இந்திர்யர்கள் மதம் மாறும் போக்கினை கை விட வேண்டும்.
இந்திய ஆண்களின் பொறுப்பற்ற நடத்தையால் இந்த பிரச்சனை!