குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டு அதே வேளையில் வன்முறை குற்றச் செயல்கள் கூடியுள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது காரணம் என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
“தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரும் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் ஒரே சமயத்தில் வெப்பக் காற்றையும் குளிர் காற்றையும் வெளியிடக் கூடாது. மலேசியா பாதுகாப்பான நாடா இல்லையா என்பதில் அவர்கள் ஒரே மாதிரியாகப் பேச வேண்டும்,” என்றார் அவர்.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டின் குற்றச் செயல் விகிதம் 26.8 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அதனால் உலக அமைதிக் குறியீட்டின் படி தென் கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடு மலேசியா என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்ட அரசாங்கம் இப்போது அவசர காலச் சட்டத்தை அகற்றியதால் வன்முறைக் குற்றச் செயல்கள் கூடிவிட்டதாக இப்போது திடீரெனச் சொல்கிறது என்றார் அவர்.
சென்ற வருடம் அவசர கால சட்டம் அகற்ற படுவதற்கு முன்பும், இப்பொழுதும் அரசாங்கக கொள்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. போலிஸ் குட்ற்றசெயல்களை ஒடுக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆகவே, அவசர கால சட்டம் நிக்கபட்டதே குற்றசெயல்கள் அதிகரிக்க காரணம் என குறுவது ஏற்ற்றுக் கொள்ள முடியாதே ஒரு கூற்று.
உங்க சண்டையை அப்புறம் வைத்துக் கொள்ளுங்க. முதல்ல எங்க இனத்துல தினமும் குறைஞ்சது ரொண்டு பேரு வெட்டிக் கிட்டும் சுட்டுக்கிட்டும் சாகிறனுங்க. அத தடுக்கறதுக்கு ஏதுவாக வழி இருக்கான்னு சொல்லுங்க.