வழக்குரைஞர்: தார்மீக வெற்றி ஆனால் மதம் மாற்ற சர்ச்சை இன்னும் தீரவில்லை

Lawyer Imtiaz Sarwar2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த  மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது தார்மீக வெற்றி என்றாலும் அது போன்ற  மாநிலச் சட்டங்கள் இன்னும் இருப்பதாக மனித உரிமைகள் வழக்குரைஞர் மாலிக்  இம்தியாஸ் சர்வார் கூறுகிறார்.

“அந்த மசோதா சர்ச்சைக்குரியதாக மாறியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஆனால் உண்மையில் அது ஏன் அப்படி மாறியது என்பது எனக்குப்  புரியவில்லை. காரணம் இது போன்ற விதிகள் அதாவது ஒருவர் அல்லது மற்றவர்;  ibu atau bapa (தாய் அல்லது தந்தை) என்பது மற்ற மாநிலங்களில் ஏற்கனவே  உள்ளது.”

“சுபாஷினி (ராஜசிங்கம் vs சரவணன் தங்கதுரை) வழக்கில் நீதிமன்றம்
கூறியுள்ளதற்கு ஏற்பவும் மற்ற மாநிலங்களுக்கு ஏற்பவும் கூட்டரசுப்
பிரதேசத்திலும் இருக்கும் பொருட்டு அண்மையில் அவர்கள் அவ்வாறு செய்ய  முயன்றனர்,” என மாலிக் இன்று காலை கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

நேற்று மீட்டுக் கொள்ளப்பட்ட அந்த மசோதாவில் இஸ்லாத்துக்கு குழந்தையை  மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் போதுமானது எனக்  கூறும் சர்ச்சைக்குரிய விதிமுறையும் அடங்கியிருந்தது.