போலீசார் அவசர காலச் சட்டத்திற்கு மாற்று யோசனைகளை தெரிவித்துள்ளனர்

2011ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட 1969ம் ஆண்டு அவசர காலச் சட்டத்திற்கு  மாற்றாக அமையக் கூடிய சட்ட வரைவுகளை போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.

“நாங்கள் உள்துறை அமைச்சுக்கு ஒரிரு மாற்று யோசனைகளை வழங்கியுள்ளோம்.  ஆனால் அவற்றின் விவரங்களை இப்போது வெளியிட முடியாது,” என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் கூறினார்.

“அந்தச் சட்ட வரைவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் குற்றங்களை ஒடுக்குவதற்கு  அவை உதவும்,” என நேற்று பெட்டாலிங் ஜெயா மெந்தாரி கோர்ட்டில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் ஜோகூர் சிம்பாங் ரெங்காமில்  இருந்த 2,600க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் பலர் மீண்டும் குற்றச் செயல்களுக்குத் திரும்பி விட்டதாகவும் உள்துறை அமைச்சர்
அகமட் ஸாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

TAGS: