தேசிய செய்தி அலைவரிசை மேலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஆர்டிஎம் ஒளிபரப்பும் நாடாளுமன்ற நேரத்தை நீட்டிக்க தாம் விரும்புவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் சொல்கிறார்.
“இதற்கு முன்பு ஆர்டிஎம் அரசாங்கத் தலைவர்களுடைய முகங்களை மட்டுமே ஒளியேற்றுகின்றது என மக்கள் கூறினர். அது இனிமேல் அவ்வாறு சொல்ல முடியாது.”
“நேரடியாக ஒளிபரப்பும் போது எதிர்த்தரப்பு எம்பி-க்கள் நிறைய கேள்விகளை எழுப்புகின்றனர். அதனால் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கின்றது,” என்றார் சாப்ரி.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்துக்கான ஒளிபரப்பு நேரத்தை 30
நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்களாக அதிகரிப்பது அவையில் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தும் என்றும் அவர் மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.
“அந்த நேரத்தில் எம்பி-க்கள் காலணிகளை எறிந்தாலும் அதனையும் நாம் பார்க்க முடியும்,” என அவர் சொன்னதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நல்ல விசயத்திற்கு போராட காலனிகளை எறிந்தால் அது தப்பில்லையே…..
எங்கே காலணிகளை வீசி விடுவார்களோ என்று பயந்துக் கொண்டு முன்னெச்சரிக்கையாக அமைச்சர் பெருமான் அறிக்கை விடுகின்றாரோ?
அப்படி என்றால் காலணியை வீசிதான் பார்ப்போம் என்னதான் நடக்குது என்று