‘மக்கள் வாங்கப்படுவதற்காக ஏழைகளாக வைத்திருக்கப்படுகின்றனர்’

TOPSHOTS-MALAYSIA-ENVIRONMENT-RIGHTS-PENANஅரசியல் பிரச்சாரத்துக்கு நிதியளிப்பது தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத  வரையில் மக்கள் வாங்கப்படுவதற்காக அரசியல்வாதிகள் அவர்களை ஏழைகளாக  வைத்திருக்கும் நிலை தொடரும் என கல்வியாளரான பிரிட்கெட் வெல்ஷ்  கூறுகிறார்.

“அதில் சிலவற்றை நாம் இப்போது காண்கிறோம் என நான் எண்ணுகிறேன்.  வறுமை நிலை அடிப்படையில் கிழக்கு மலேசியாவில் நிகழ்கின்ற விஷயங்களைப்  பார்க்கும் போது உண்மையில் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் அங்கு  நீண்ட காலமாக வாக்குகள் வாங்கப்படுவது தொடருகின்றது. அந்த மாநிலங்களில்
பெரும்பான்மை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை அவர்கள் அடிப்படையில்  மாற்றவே இல்லை,” என்றார் அவர்.

அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு  ஒன்றில் அவர் பேசினார். அந்தப் பிரச்னை தொடருமானல் என்ன விளைவுகள்  ஏற்படும் என அவரிடம் முன்னதாக வினவப்பட்டது.

13வது பொதுத் தேர்தல் மலேசிய வரலாற்றில் அதிகம் செலவான அரசியல்  பிரச்சாரம் என்பதை அவரும் ஜேம்ஸ் சின் என்ற இன்னொரு கட்டுரையாளரும்  கூட்டாக சமர்பித்த கட்டுரையில் குறிப்பிட்டனர். என்றாலும் செலவு  செய்யப்பட்டது ஒரு பில்லியன் ரிங்கிட்டா அல்லது 2 பில்லியன் ரிங்கிட்டா  என்பதில் அவர்கள் வேறுபட்டனர்.