‘அரசியல் தலைமைத்துவம் என்றும் மலாய்க்காரர் கையில்தான் இருத்தல் வேண்டும்’

1-profமலாய்க்காரர்- மேலாதிக்கம் கொண்ட அரசியலைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதே மலேசியாவுக்கு நல்லது என்கிறார் அரசியல் ஆய்வாளர் வஹாபுதின் ர’யிஸ்.

“அது இல்லை என்றால் மலேசியா வருங்காலத்தில் கடும் தொல்லைகளை எதிர்நோக்கலாம்”.

நேற்று, மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தேர்தலில் பன்முக கலாச்சார மதிப்புகள்’ என்னும் கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.

இப்படிச் சொல்வதால் மலாய்க்காரர்- அல்லாதாருக்கு  “அவர்களின் நியாயமான பங்கு” கிடைக்கக்கூடாது என்பது பொருளல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.