சிங்கப்பூரின் ‘பிற்போக்கான’ புதிய விதிகளை பெரிய இணைய நிறுவனங்கள் சாடியுள்ளன

singapore_skylineசிங்கப்பூர் செய்தி இணையத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதை  வலைப்பதிவாளர்களும் மனித உரிமை அமைப்புக்களும் சாடியுள்ள வேளையில்  யாரும் எதிர்பாராத வகையில் பெரிய இணைய நிறுவனங்களும் அந்தக்  கட்டுப்பாடுகளைக் குறை கூறியுள்ளன.

அந்தப் புதிய கட்டுப்பாடுகள் தொழில் துறைக்குப் பாதகமாக முடியும் என
Facebook Inc, eBay Inc, Google Inc, Yahoo! Inc ஆகிய நான்கு கூறியுள்ளன.

“அவை வர்த்தகத்துக்கு நட்புறவான நாடு என்ற சிங்கப்பூரின் அனைத்துலகத் தோற்றத்தை  பாதித்துள்ளது,” என அவை தெரிவித்தன.

சிங்கப்பூர் தொடர்பு அமைச்சருக்கு ஆசிய இணைய கூட்டணியில் அங்கம்  பெற்றுள்ள அந்த நான்கு அமைப்புக்களும் எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

பெரிய தொழில் நிறுவனங்களைக் கவரும் சிங்கப்பூரின் வெற்றி நிலையானது அல்ல  என்பதற்கு அது முதலாவது அறிகுறி என்றும் கருதப்படுகின்றது.

Facebook Inc, eBay Inc, Google Inc, Yahoo! ஆகியவை சிங்கப்பூரில் வலுவாக  வேரூன்றியுள்ளன.