2012ம் ஆண்டு அரசாங்கச் செலவுகளுக்காக கூடுதலாக 12 பில்லியன் ரிங்கிட் கோரப்பட்டுள்ளது

2012ம் ஆண்டு ஏற்பட்ட செலவுகளுக்குக் கூடுதல் ஒதுக்கீடுகளாக கல்வி அமைச்சு  3.3 பில்லியன் ரிங்கிட்டையும் சுகாதார அமைச்சு 1.7 பில்லியன் ரிங்கிட்டையும்  கோரியுள்ளன.

மக்களவையில் இன்று முதல் வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்ட 12.17 பில்லியன்  ரிங்கிட் துணை விநியோக மசோதாவில் பட்டியலிடப்பட்டுள்ள தொகைகளில்  அவை இரண்டும் பெரிய தொகைகளாகும்.

நிதித் துணை அமைச்சர் அகமட் மஸ்லான் அந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.