‘அவசர காலச் சட்டம் பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி நிறுத்திக் கொள்ள வேண்டும்’

khalid-abu-bakar_gifரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தை கொண்டு  வருவது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ்  படைத் தலைவர் காலித் அபு பாக்கார் நிறுத்திக் கொண்டு போலீஸ் படையின்  புலனாய்வு ஆற்றலை வலுப்படுத்தத் தொடங்க வேண்டும் எனப் பெட்டாலிங்  ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

“போலீசார் ஆதாரங்களை எப்படித் தேடுவது என்பது மீது பயிற்சி பெற
வேண்டும்,” என பிரதமர் நஜிப் அப்துல் அரசாக் கூறியுள்ள அறிவுரைக்குக் காலித்  செவிசாய்க்க வேண்டும் என அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்குப் பதிலாகத்  திட்டமிடப்பட்டுள்ள சட்டம், நாட்டில் குற்றச் செயல்களைச் சமாளிப்பதற்கு உதவும்  என காலித் நேற்று விடுத்த அறிக்கை மீது புவா கருத்துரைத்தார்.

சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்து அவர்களை அவசர காலச் சட்டத்தின் கீழ்  தடுத்து வைப்பதற்குப் பதில் போலீசார், சந்தேகத்துக்குரிய நபர்கள் மீது குற்றம்  சாட்டுவதற்கு ஆதாரத்தைத் தேடி வழங்க வேண்டும் என 2012ம் ஆண்டு ஜுலை
மாதம் ரசாக் அரசாங்க ஆய்வுக் கல்லூரியில் அரசு ஊழியர்களுக்கு ஆற்றிய  உரையில் நஜிப் கேட்டுக் கொண்டதை புவா சுட்டிக் காட்டினார்.

TAGS: