பொதுத்தேர்தல் ஒரு ‘மலேசிய சுனாமி’ என்பதே மிகப் பலரின் கருத்து

1 ritaமலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலை ஒரு ‘மலேசிய சுனாமி’ என்றுதான் கருதுகிறார்களே தவிர அதைச் “சீனர் சுனாமி’ என நினைக்கவில்லை என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

1,300 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 65.8 விழுக்காடு மலாய்க்காரர்களும், 93.2 விழுக்காடு சீனர்களும் 87.6 விழுக்காடு இந்தியரும், முஸ்லிம் பூமிபுத்ராக்கள் 61.1 விழுக்காட்டினரும், 79.7 விழுக்காடு முஸ்லிம்-அல்லாத பூமிபுத்ராக்களும்  தேர்தல் முடிவை ஒரு ‘மலேசிய சூனாமி’ என்றழைக்கவே விரும்புவது தெரிய வந்தது.

அதைச் சீனர் சுனாமி என்று வருணித்து திருப்தி கொண்டவர்கள் வெற்றிபெறாத அம்னோ ஆள்கள் மட்டுமே என்று வியூக நடவடிக்கை மன்றத்தின் ரீத்தா சிம் கிண்டலடித்தார்.