தேச நிந்தனைச் சட்டம் மீது அம்னோ தலைவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்களித்தது போல அதனை ரத்துச் செய்வது தாமதமடைகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் சொல்கிறார்.
அந்தச் சட்டம் தொடர வேண்டும் என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தும் வேளையில் சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நான்சி சுக்ரி ஆகியோர் அது ரத்துச் செய்யப்படுவதை ஆதரிக்கின்றனர் என நுருல் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“அதனால் தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வது மீதான தமது உண்மை நிலையை நஜிப் விளக்க வேண்டும்.”
அரசாங்கம் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்து அதற்குப் பதில் ‘தேசிய ஒற்றுமைச் சட்டத்தை’ கொண்டு வரும் என நஜிப் கடந்த ஜுலை மாதம் வாக்களித்தார். ஆனால் அண்மைய விரைவில் அதனை ரத்துச் செய்யும் சாத்தியமில்லை என இப்போது அரசாங்கம் சொல்கிறது.