முன்னாள் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் தமது பயணங்களுக்கு செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.
“ஏனெனில் அந்தப் பணம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதாகும்,” என்றார் அவர்.
“பணம் ஒதுக்கப்பட்டால் அதனை நாங்கள் செலவு செய்ய வேண்டும். அமைச்சின் பணம் செலவு செய்யப்பட வேண்டும்,” என நஸ்ரி, அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த போது சொன்னார்.
“பணத்தை மிச்சப்படுத்துவது எங்கள் வேலை அல்ல,” என அவர் கூறினார்.
மலேசிய சுற்றுப்பயண வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இங்-கின் செலவுகளை நஸ்ரி கட்டுப்படுத்துவாரா என கடந்த வாரம் சிரம்பான் டிஏபி உறுப்பினர் அந்தோனி லோக் என வினவியிருந்தார்.
அமைச்சர் நஸ்ரி பேசுவது கொஞ்சமும் நியாயம் இல்லை .மக்கள் பணத்தில் இப்படி செலவு இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது . சுற்றுலா துறைக்கு இவர் எவ்வாறான செலவு செய்தார். அவர் பணியை எந்த அளவுக்கு செய்துள்ளார் . வேடிக்கையாக உள்ளது இவர் பேசுவது ? அப்படியானால் போக்குவரத்துக்கு அமைச்சும் இப்படியே சிக்கனம் செய்து மித பணத்தில் குடும்பத்தோடு வெளிநாடு போகலாமா.? சுகாதார அமைச்சும் இதை பின்பற்றினால் ?

இவள்!! ஆகா!!