“நல்லது, அது தொடர்ந்து இருக்கட்டும். ஆனால் அது எல்லா தேச நிந்தனை வழக்குகளுக்கும் அமலாக்கப்படுமா அல்லது பிஎன் கைப்பாவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் விதி இருக்குமா ?”
தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது, அது இன்னும் தேவை என்கிறார் ஸாஹிட்
அடையாளம் இல்லாதவன்_5fb: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த அறிக்கையை நான் முழுமை செய்கிறேன்:
“தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்படக் கூடாது என நான் எண்ணுகிறேன். இல்லை என்றால் என்ன மிஞ்சும் (எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அம்னோ பயன்படுத்துவதற்கு) ?”
நீங்கள் உங்கள் சொந்த நலனுக்காக அதனை வைத்திருக்க விரும்புகின்றீர்கள். அம்னோவுக்கு இடையூறாக இருக்கும் மக்களை மருட்ட அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த நீங்கள் விரும்புகின்றீர்கள். ஆகவே அந்தச் சட்டம் மோசமானது
அல்ல. அது இல்லாவிட்டால் அம்னோ நிலை தான் மோசமடையும்.
குவிக்னொபாண்ட்: ஸாஹிட் கிரிமினல் அவதூறு, சிவில் அவதூறு போன்ற விஷயங்களை மறந்து விட்டார்.
அவை அப்பாவி மக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை. தங்களைக் குறை கூறுகின்றவர்கள் அவதூறு வழக்குத் தொடுக்க துணிச்சல் இல்லாத, அப்பாவி அல்லாதவர்களைப் பாதுகாக்கவே தேச நிந்தனைச் சட்டம் தொடர வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.
முட்டாள் அல்ல: தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும். ஏனெனில் ஜனநாயகத்துக்கு புறம்பான, ஊழலான சிறுபான்மை அரசாங்கம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைக் கைது செய்வதற்கு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது.
பிஎன் அரசாங்கம் பின்பற்றுகின்ற இரட்டைத் தரத்தை மக்கள் அறிந்துள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
தேச நிந்தனைக் கருத்துக்களை வெளியிடும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்க்காசா, உத்துசான் மலேசியா மீது குற்றம் சாட்டப்படவே இல்லை. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைது செய்ய போலீசார் வெகு திறமையாகச் செயல்படுகின்றனர்.
மக்கள் அந்த இரட்டைத் தரத்தைக் கண்டு வெறுப்படைந்து விட்டனர். நியாயமற்ற தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என மக்கள் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
இப்போது நினைத்துச் செயல்படுங்கள்: எதற்காக ‘மிஞ்ச வேண்டும் ?
எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பிஎன் ஆட்களுக்கு எதுவும் இருக்காதா ? உண்மைகளை வெளியிடும் மக்களிடமிருந்து பிஎன் -னைப் பாதுகாக்க எதுவும் இருக்காதா ?