மலேசியாவில் போலீசும் அரசியல் அமைப்புக்களும் மிகவும் ஊழல் மலிந்தவையாக தொடர்ந்து கருதப்படுகின்றன.
உலகளவில் 36 நாடுகளில் போலீஸ் ஊழல் மிகுந்தது என்றும் 20 நாடுகளில் நீதித் துறை மிகவும் ஊழலானது என்றும் 51 நாடுகளில் அரசியல் அமைப்புக்கள் ஊழலானவை என்றும் கருதப்படுவதற்கு இணங்க அந்த எண்ணம் அமைந்துள்ளது.
அனைத்துலக வெளிப்படைக் கழகம் 2013ம் ஆண்டுக்கு வெளியிட்ட உலக ஊழல் அளவுகோலில் அந்தத் தகவல் அடங்கியுள்ளது.
“லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றவற்றில் போலீஸும் நீதித் துறையும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது,” என பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் செங் குவான் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அவர் அனைத்துலக வெளிப்படைக் கழகம் 2013ம் ஆண்டுக்கு வெளியிட்ட உலக ஊழல் அளவுகோல் குறித்துக் கருத்துரைத்தார்.