IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள். தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பதால் இந்த நாட்டிலுள்ள அமலாக்க நிறுவனங்களுக்கு இடையில் சட்டங்கள், அதிகாரக் கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரச்னைகள் உருவாகும்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மக்களவையில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமது அமைச்சு சம்பந்தப்பட்ட விவாதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய போது கூறினார்.
IPCMC அமைக்கப்பட்டால் அது போலீசை புலனாய்வு செய்வதுடன் அதன் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படக் கூடாது. எல்லா அமலாக்க நிறுவனங்களும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
அதனால் தான் அரசாங்கம் Siap என்ற அமலாக்க நிறுவனம் நேர்மை
ஆணையத்தை அமைத்தது என்றும் ஸாஹிட் குறிப்பிட்டார்.
அத்துடன் IPCMC-யை அமைப்பது கூட்டரசு அரசமைப்புக்கும் நீதிக்
கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதாலும் அரசாங்கம் அதனை நிராகரிக்கிறது என்றார் அவர்.