நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வசதிகளை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள மக்களவை அனுமதிப்பதற்காக நிரந்தர ஆணை 27 (3)-ன் கீழ் பிகேஆர் பாடாங் செராய் எம்பி என் சுரேந்திரன் தீர்மானம் ஒன்றைச் சமர்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் பொது மக்கள் நாடாளுமன்ற வசதிகளைப்
பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
மக்களவை மீது மக்களுடைய அக்கறையை அதிகரிப்பதற்கு நாடாளுமன்ற வளாக வசதிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
“அரசாங்கம் நாடாளுமன்றத்தை பிரமுகர்கள் அவையாக நடத்துகின்றது. இது தேவான் ராக்யாட் (மக்களவை) Dewan Elitist அல்ல (பிரமுகர்கள் அவை),” என சுரேந்திரன் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அதற்கு முன்னதாக போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த பி கருணாநிதியின் குடும்பத்தாருடன் கூட்டாக நிருபர்கள் சந்திப்பை நடத்துவதற்கு சுரேந்திரன் மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்றக் காவலர்கள் முறியடித்துவிட்டனர்.