1948 தேச நிந்தனை சட்டம் தொடர்பில் அமைச்சர்கள் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுக் குழப்பி வருகின்ற நிலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) உதவித் தலைவர் காவ் லேக் டீ கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நேற்று சுஹாகாம் ஆண்டறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், ஒரு செய்தியாளரின் வினாவுக்கு விடை பகர்ந்த காவ், “அமைச்சர்களின் முரண்படான அறிக்கைகளைப் பார்க்கையில் (அச்சட்டத்தின்) உண்மைநிலை என்னவென்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”, என்றார். இந்தக் குழப்பத்தை நஜிப்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றாரவர்.